காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமான நிலையம் துவக்க கோரி சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி MP மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம்‌ வலியுறுத்தல்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாட்டில் விமான நிலையம் துவக்க கோரி கார்த்தி எம். பி. , மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். 

அவர் அளித்த மனுவில் கூறியதாவது, 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் பழமையான விமான ஓடுதளம் உள்ளது.
இது மத்திய அரசின் 'உதான்' திட்டத்திற்கு ஏற்ற இடம். செட்டிநாடு விமான ஓடுதளம் 1930 ம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரால் இங்கு பறக்கும் விமான பயிற்சி கிளப் நடத்தப்பட்டது. இரண்டு விமான ஓடுதளம் இன்றைக்கும் அதன் தரம் குறையாமலும், சேதமற்ற நிலையில் உள்ளது. மதுரை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து 80 முதல் 100 கி. மீ. , துாரத்தில் செட்டிநாடு விமான ஓடுதளம் உள்ளது. இங்கு மத்திய அரசு விமான நிலையத்தை துவக்கினால் சிவகங்கை மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பயன்பெறும். 

சென்னை, பெங்களூருவிற்கு இங்கிருந்து நேரடி விமானத்தை இயக்கலாம். விமான நிலையம் வந்தால் சுற்றுலா வளர்ச்சி, பாரம்பரிய, வரலாற்று சிறப்பு பெற்ற இடங்களான காளையார்கோவில், திருமயம், பிள்ளையார்பட்டி, செட்டிநாடு பாரம்பரிய பங்களாக்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்லலாம். இதனால் செட்டிநாட்டில் விமான நிலையத்தின் தேவை மிக முக்கியமானது, என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments