திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை 'ஹய்யா.. ரயிலு!' ட்ரெய்ன் மீது ஆசை... தனியாக ரயிலேறி வேற ஊர் சென்ற 8வயது சிறுவன்..! சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு, தனியாக திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறி பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய எட்டு வயது சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ரலீஸ் வயது 8. இவர்களது வீடு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. சிறுவன் ரலீஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் மாலை பள்ளி விட்டு வந்த சிறுவன் ரலீஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த செகந்திராபாத ராமேஸ்வரம் ரயிலில் தனியாக ஏறி விட்டான்.

இந்த நிலையில் ரயில் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை வந்து அடைந்த உடன் அதற்கு மேல் பயணம் செய்ய பயந்து பட்டுக்கோட்டை ஸ்டேஷனிலேயே இறங்கி விட்டான். இதனை அடுத்து தனியாக பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்து நின்ற சிறுவனை பார்த்த ரயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அச்சிறுவனிடம் விசாரித்த போது ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இரயிலில் ஏறி வந்ததாக தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து அவனது தந்தையின் தொலைபேசி எண்ணை கேட்டறிந்து சிறுவனின் தந்தையிடம் தகவல் கூறி பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் , சிறுவனுக்கும் சிறுவனின் தந்தைக்கும் அறிவுரை கூறி சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments