கோபாலப்பட்டிணத்தில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலப்பட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோபாலப்பட்டிணம் கிராமமானது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாகும். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதிகளும் சரிவர செய்யப்படவில்லை.
இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊரில் உள்ள ஒரு இடத்தில் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் இந்த குப்பைகளால் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இதனால் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது. பிறகு தற்காலிகமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொட்டப்பட்டு வந்தது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் குப்பை எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதனால் கோபாலப்பட்டிணம் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை குளத்து மேடு, சாலையின் ஓரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இதனால் கோபாலப்பட்டிணம் முழுவதும் குப்பை காடாக காட்சியளிக்கிறது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. பல இடங்களில் சாலையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இப்போது மழைக் காலம் என்பதால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் ஓடுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கழிவுநீர் செல்லாமல் தடுப்பதுடன் குப்பைகளை அகற்றி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈத்கா மைதானம் அருகே இருக்கும் குப்பைகள்
தோப்பு சாலையில் இருக்கும் குப்பைகள்
காட்டுக்குளம் அருகே இருக்கும் குப்பைகள்
பழையாகுளம் அருகே இருக்கும் குப்பைகள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.