மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  மதிப்புக்குரிய திரு ஜீவானந்தம் அவர்கள் அவர்கள் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திரு முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்தல்,பள்ளி கட்டிட பராமரிப்பு செய்தல்,இல்லம் தேடி கல்வியில் படிப்பதற்கு மாணவர்களை  அனுப்புதல் நம்ம பள்ளி,புதுமை பெண் திட்டம் முதலியவை எடுத்து கூறப்பட்டது.
 
பள்ளி மானியத்தின்  செலவின மேற்கொள்ளும் விவரங்கள்  அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மணமேல்குடி இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முடிவில் ஆசிரியர் திருமுகம் நன்றியுரை கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments