தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கனிமொழி MP மனு



 


தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. மனு அளித்தார்..

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து முடித்துத் தரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், கனிமொழி எம்.பி. அளித்த மனுவில்,





மும்பையில் இருந்து மதுரை வரையிலான 'லோக்மான்ய திலக் விரைவு வண்டி' தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், 

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் சேவை வேண்டும், 

முன்பு அறிவித்திருந்த தாம்பரம் - செங்கோட்டை இடையிலான வாரம் மூன்று ரயில்கள் சேவையை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ராமேஸ்வரம் - மங்களூர் இடையில் புதிய ரயில் சேவை வேண்டும்,

கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், 

காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை மேம்படுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கனிமொழி எம்.பி. ஏற்கெனவே மனு அளித்திருந்தார்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டி வரும் தூத்துக்குடி மாவட்டம் தொடர்ந்து ரயில்வே திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரயில்வே பயணிகள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments