புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு சென்னை & கோவையில் இருந்து காரைக்குடி சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை






புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு சென்னை கோவையில் இருந்து காரைக்குடி சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 




சென்னை மற்றும் கோயமுத்தூரிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் இயக்கிட வேண்டுவது - சம்மந்தாக

அன்புடையீர், வணக்கம். 

எனது சிவகங்கை தொகுதியிலிருந்து தொழில் செய்வதற்கும், பணியாற்றுவதற்கும், பொதுமக்களும் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் சென்னை, கோயமுத்தூருக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு வரவேண்டி 

சென்னையிலிருந்தும், கோயமுத்தூரிலிருந்தும் திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கும்,
 
சென்னையிலிருந்து திருவாரூர் திருத்துறைப்பூண்டி,  பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கும்

இருமார்கத்திலும் சென்று வர பொங்கல் பண்டிகை கால சிறப்பு இரயில் இயக்கி எனது தொகுதி மக்களுக்கு உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments