அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாரந்திர சிறப்பு ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்ல கோரி தெற்கு இரயில்வே பொதுமேளாலர் திரு.R.N.சிங் அவர்களிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் அவர்கள் MLA கோரிக்கை



 


ஸ்ரீவில்லிபுத்தூர் MLA உயர்திரு.மான்ராஜ் அவர்கள் தெற்கு இரயில்வே பொதுமேளாலர் திரு.R.N.சிங் அவர்களை நேரில் சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே தேவைகளை கோரிக்கைக் கடிதமாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே ஸ்டேசனுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


1) செங்கோட்டையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் இரு மார்கத்திலும் இயங்கும் இரயில்களான எண்கள்.16848, 16847 இரயில்களில் 10 பெட்டிகள் மட்டுமே இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே மேற்படி இரு ரயில்களுக்கு கூடுதலாக 10 பெட்டிகள் அமைத்து 20 பெட்டிகளாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கன்னிக்கு சென்று திரும்பும் இரயில்களான (06035 மற்றும் 06036) இரயில்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை இதேபோல் எர்ணாகுளத்திலிருந்து தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில்களலான (06067 மற்றும் 06068) இரயில்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்லவில்லை.

எனவே மேற்கண்ட இரயில்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments