நாகூர் டு காயல்பட்டிணம் முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்




முத்துப்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காாில் இருந்த 6 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நாகூா் தர்காவுக்கு வந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்தவர் கிதிர்முகம்மது. இவருடைய மகன் சேக் நூர்தீன். இவர் தனது மனைவி உள்பட மூன்று பெண்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவுக்கு கந்தூரி விழாவில் பங்கேற்க காரில் வந்தார்.

பின்னர் அவர்கள் நாகூரில் இருந்து காரில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சேக்நூர்தீன் குடும்பத்தினர் பயணித்த கார் வந்தபோது பின்னத்தூர் காத்தவராயன் கோவில் அருகே திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக்நூர்தீன் காரை நிறுத்தினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காரில் இருந்த அனைவரையும் கதவை திறந்து சேக் நூர்தீன் வெளியேற்றினார்.

இதனால் காரில் இருந்த 6 பேரும் கீேழ இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

எலும்புக்கூடானது

தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் எடையூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments