மும்மத தலங்களை இணைத்திடும் வகையில் ஒடும்: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு





கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக செல்லும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்பார்க்கினர்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை மதியம் 1. 10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5. 40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. 

வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6. 40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இந்த சிறப்பு எக்ஸ்பிரசானது, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜ பாளையம், சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. 

இந்த ரெயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் வழக்கமான பயணிகள் நலன்கருதி 

மதநல்லிணக்க தொடர் வண்டி சேவையாக (சபரிமலை ஐயப்பன் - நாகூர் ஆண்டவர் - வேளாங்கண்ணி தேவமாதா என மும்மதங்களின் புகழ்பெற்ற தலங்களை இணைத்திடும் ரெயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கிட வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவை முன்மொழியப்பட்டபோது தினசரி சேவையாக இயக்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் எர்ணாகுளம் யார்டு மேம்பாட்டு பணிகளை சுட்டிக்காட்டி வாரமிருமுறை சேவையாக இயக்கிடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தற்போது பணிகள் முடிந்துவிட்டதால் தினசரி சேவையாக இயக்கிட வேண்டும். இந்த சேவையினை தொடர்ந்து இயக்கிட திருவனந்தபுரம், மதுரை, திருச்சி கோட்ட மேலாளர்கள் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments