ஆவுடையார்கோவிலில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்ஆவுடையார்கோவிலில் மதுவின் தீமைகள், சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில், காலால் கோட்ட அலுவலர் பரணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன் (ஆவுடையார்கோவில்), ஜபருல்லா (மணமேல்குடி) மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு மதுவின் தீமைகள், புகையிலை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி சென்றனர். மேலும் மதுவின் தீமைகள் பற்றிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments