சம்பைபட்டினத்தில் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களுக்குள் புகுந்த கார்.!
      சம்பைபட்டினத்தில் நிலை தடுமாறிய கார் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களுக்குள் புகுந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் சம்பைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்  கார் சாலையைவிட்டு நிலைதடுமாறி கருவேல மரங்களுக்குள் நுழைந்து  விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனால் அந்த பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. காரில் பயணம் செய்தவர்கள் யார் இந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அதிகம் ஏற்படுவதால் பொதுமக்கள் இடையே கவலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments