கோட்டைப்பட்டினத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு தீர்வு



        புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் ஊராட்சி பகுதிகளில்  சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோட்டைப்பட்டினத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் தொடர்ந்து இருக்கிறது. இதை தடுக்கும் நோக்கத்தில் கோட்டைப்பட்டினம் ஊராட்சியின் சார்பில் சாலையில் தெரியும் கால்நடைகளை பிடித்து கட்டி வைத்து உரிமையாளர்களிடம் அபராதம் பெறப்பட்டது. 

கால்நடைகள் மீண்டும் சாலையில் திரிந்தால் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும் என்பதை அவர்களிடம் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது வரை மொத்தம் ரூபாய் இருபதாயிரத்தி ஐநூறு அபராதமாக பெறப்பட்டு ஊராட்சி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 



மேலும் சாலை விபத்தில் பலியான கால்நடைகள் உரிமை கோராமல் சாலையிலேயே கிடந்து ஊராட்சியின் சார்பிலே பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாலையில் மாடுகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்தாலும் .தொடர்ச்சியாக இந்த பணி தொடரும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் முகம்மது ஹாரிஸ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments