தொண்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் .!




தொண்டியில் முக்கிய சாலைகள் சந்திப்பில், தாறுமாறாக செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்த, ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் சோதனைச் சாவடி அருகே நம்புதாளை, தொண்டி, திருவாடானை செல்லும் சந்திப்பு உள்ளது.

ராமநாதபுரம்-பட்டுக்கோட்டை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையாகவும், மதுரை- தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. இச்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் சந்திக்கும் போது, போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருதாகவும் இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள் இதற்கு தீர்வாக, சந்திப்பின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து, போக்குவரத்தை பிரித்து விடுவதே பிரச்னைக்கு தீர்வாகும். எனவே பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரவுண்டானா அமைப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments