ஆவுடையார் கோவில் அரசு கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி




ஆவுடையார்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரேணுகாதேவி தலைமை தாங்கி பேசினார். அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மனிதனின் சுய ஒழுக்கமே அவனது வாழ்வின் அடிப்படை அடையாளம் ஆகும். நாம் ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவ்வித தீய பழக்கங்களும் இல்லாத மனிதனாக வலம் வர வேண்டும். 

போதைப்பொருள் பழக்கத்தினால் சமுதாயத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்படுகிற பிரச்சினைகள் ஏராளம். கணவனை இழந்து, கைக்குழந்தைகளுடன் துன்பப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. போதைப்பொருள் இல்லாமல் வாழ்வேன் என்ற உறுதிமொழி எடுத்துள்ள நீங்கள் அதன்படியே வாழ வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜீவரெத்தினம் வரவேற்றார். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments