இறையூர் வேங்கையூரில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்!

இறையூர் வேங்கையூரில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கையூர் கிராமத்தில் நேற்று 06.01.2023 அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சமீபத்தில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்து மனதளவிலும் உடலளவிலும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டும், ஆதரவாய் நிற்கும் பொருட்டும் திசைகள் அமைப்பு இந்த முன்னெடுப்பை எடுத்தது.

முகாமை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.கவிவர்மன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பத்மா முத்தையா மற்றும் திருமதி சலோமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தோல் நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவருமான Dr.ச.தெட்சிணாமூர்த்தி மக்களுக்கு சிகிச்சை அளித்தார். 35 குடும்பங்கள் கொண்ட இந்த ஊரில் 50 பேர் பயன்பெற்றனர்.

திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பொருளாளர் திரு.முகமது முபாரக், திரு.ராஜேந்திரன், திரு.புகழேந்தி, திரு.மாடசாமி, திரு.ஜெயக்குமார், திரு.கபார்கான், திருமதி.மைதிலி கஸ்தூரிரங்கள், கீதாஞ்சலி மஞ்சன் மற்றும் திரு.ரியாஸ் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments