புதுக்கோட்டையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் மூலிகை கண்காட்சி
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில், 6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதேபோல் மூலிகை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மூலிகை செடிகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டனர். நிலவேம்பு கசாயம், முருங்கை சூப் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments