அறந்தாங்கியில் சாலைகளில் சுற்றி திரிந்த 55 மாடுகள் சிறை பிடிப்பு




அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குட்பட்ட செக்போஸ்ட், பெரிய கடைவீதி, கட்டுமாவடி முக்கம், அண்ணா சிலை, பட்டுக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் வளர்க்கப்படும் மாடுகள் பாதசாரிகள் மற்றும் வாகன ஒட்டிகளுக்கு இடையூராக சாலைகளில் சுற்றித்திரிந்தன இதனால் நகரில் பல இடங்களில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த் மற்றும் நகராட்சி ஆணையர் லீமா சைமன் ஆகியோரின்உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பொது மக்களுக்கு இடையூராக சாலைகளில் சுற்றி திரிந்த 55 மாடுகளை பிடித்து சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்

மேலும் மாட்டை திரும்ப பெற மாட்டின்உரிமையாளர்கள் அபராததொகையாக ரூபாய் இரண்டாயிரம் செலுத்தி அதற்கான ரசீதை காண்பித்து மாடுகளை பிடித்து செல்லலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர், இதன் மூலம் நகராட்சிக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments