மின் இணைப்புகளில் பெயர் மாற்ற நாளை (09-01-23) சிறப்பு முகாம்

        புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம் ஆகிய ஊர்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் மாற்றம் செய்ய விரும்பும் மின் உபயோகிப்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொடுத்து சரி பார்த்த பின்பு உரிய கட்டணங்களுடன் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments