அறந்தாங்கியில் பஸ் எடுப்பதில் நேர பிரச்சனை அரசு-தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்
அறந்தாங்கியில் பஸ் எடுப்பதில் நேர பிரச்சனை காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5: 30 மணிக்கு ஒரு தனியார் பேருந்தும், 5: 45 மணிக்கு ஒரு அரசு பேருந்தும் கட்டுமாவடிக்கு செல்கிறது. இன்று அதிகாலை வழக்கம் இரண்டு பேருந்துகளும் புறப்பட்டது. இந்த இரண்டு பேருந்துகளும் கட்டுமாவடி முக்கத்தில் நேர பிரச்சினை காரணமாக சாலையின் நடுவே நிறுத்தி இரு பேருந்துகளின் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பேருந்துகளின் நேரத்தை வரைமுறைப்படுத்தி இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் என்பதே பேருந்து பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments