அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கோபாலப்பட்டிணம் மக்கள்! மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்தம்பித்தது போக்குவரத்து!!

அடிப்படை வசதி கோரி கோபாலப்பட்டிணம் கிராம மக்கள் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை, போதிய குடிநீர் வசதி மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் விதமாக எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக கிராமம் மாறி உள்ளதால் கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். 
இதனையடுத்து உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் தோழமைக்கட்சி நண்பர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர்களில் ஒருவரான முகமது அலி ஜின்னா  கூறுகையில் எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் தான் எங்கள் ஊராட்சியிலேயே ஊராட்சி தலைவராகவும் உள்ளனர். துணைத் தலைவராகவும் உள்ளனர். ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் போட்டியின் காரணமாக எந்த ஒரு வேலையையும் அவர்கள் ஊராட்சி சம்பந்தமாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதன் பிறகு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பாளர் நாகராஜன் என்பவர் கூறுகையில் இந்த பகுதிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்னால் நாங்கள் வந்து பார்த்தபோது இது கிராமமே இல்லை குப்பை கூடமாக உள்ளது என்றும், அனைத்து அதிகாரிகளிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்ற காரணத்தால் இன்று ஜமாத்தார்கள் உடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.மேலும் ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் அடுத்த மாதம் 10-ஆம் தேதி மிகப்பெரிய மறியல் போராட்டம் 

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில் குப்பைகளை உடனடியாக அகற்றி விடுகின்றோம் என்றும் வரும் 30 நாட்களுக்குள் சாலைகளை சரி செய்து தருவதாக எழுதி கொடுத்து கையெழுத்திடப்பட்டு உத்திரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. 


இந்த சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments