கோட்டைப்பட்டினத்தில் மீனவ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பேரிடர் பல்நோக்கு கட்டிடத்தில் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக மீனவ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் துணை தாசில்தார் முத்துக்கனி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட லெப்டினல் கமாண்டட் சுச்சுவேஷன், இந்திய கப்பல் படை, கோஸ்ட் கார்ட் உள்ளிட்ட துறைகளில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி மீனவ இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். மீன்வளம் சார்ந்த படிப்புகள் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் எடுத்துரைத்தார். கூட்டத்தில் அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முத்து, வருவாய் ஆய்வாளர் வினோத், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ஆத்திஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள், கடலோர காவல் குழுமத்தினர், மீன்வளத்துறையினர், சாகர் மித்ரா பணியாளர்கள், மீனவ இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments