பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து!






பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது
 
பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ந் தேதி இரவில் ரெயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், . ஜனவரி 10 வரை பாம்பன் பாலத்தில் ரெயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் மறுஅறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் [மெயின் லைன் (16751/16752), கார்ட் லைன் (22661/22662) வழி ரயில்கள்], திருப்பதி ராமேஸ்வரம் திருப்பதி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (16779/16780), கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (22622/22621), அஜ்மீர் - ராமேஸ்வரம் - அஜ்மீர் (20973/20974), பனாரஸ் - ராமேஸ்வரம் - பனாரஸ் (22536/22535), ஓஹா - ராமேஸ்வரம் - ஓஹா (16734/16733) வாராந்திர விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோண்மென்ட் (22614/22613), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (20896/20895), ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி (07355/07356), கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16618/16617), செகந்திராபாத் - ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07695/07696) வாராந்திர விரைவு ரயில்கள் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கி.மீட்டர் நீளம் கொண்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது வரை 84 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும். இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 105 ஆண்டுகள் பழமையானது. மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914 ஆம் ஆண்டு அசல் பாலம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் கடல் ரயில் பாலத்துக்கு இணையாக ஒரு புதிய சாலைப் பாலம் கட்டப்படும் வரை இரண்டு இடங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பாக இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments