பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மற்றும் பெங்களூரில்‌ இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க நவாஸ் கனி எம்பி கோரிக்கை.




பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ் கனி எம்பி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநகரங்கள் மற்றும் வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேஸ்வரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ் கனி எம்பி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments