கிழக்கு கடற்கரை சாலையை சீர் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பொதுநல மனு
மயிலாடுதுறையை சேர்ந்தவர் வக்கீல் கே.ராஜேந்திரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். சென்னையில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், ஆரோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், நாகூர், வேளாங்கண்ணி போன்ற வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், இந்த சாலையை கண்டு கொள்வது இல்லை. முறையாக பராமரிப்பதும் இல்லை. இதனால், குண்டு குழியுமாக இந்த சாலை உள்ளது.
மரம் வெட்ட தடை
குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் வாகனங்களில் பயணம் செய்வோரின் இடுப்பு, முதுகுதண்டு வடம் பாதிக்கப்படுகிறது. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்வதால் வாகனங்களும் பழுதடைந்து விடுகிறது.
இந்த சாலையில் குறியீடு பலகைகள் இல்லை. இதனால் தினமும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. இதன்மூலம் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகின்றன. ஆனால், இந்த சாலையை சரி செய்யாமல், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலை இருபக்கமும் உள்ள பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துகின்றனர். இதனால் சூற்றுச்சூழல் பாதிக்கப்பட உள்ளது. இப்பகுதிகளில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பதால், இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எனவே, கிழக்கு கடற்கரைச் சாலையை சீர் செய்ய உத்தரவிட வேண்டும். சாலையில் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பதில்
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.