மாநில கலைத் திருவிழாவில் புதுக்கோட்டைக்கு மூன்றாமிடம்
தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு வகையான கலைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற எண்ணிக்கை அடிப்படையில், மாநில அளவில் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது.

பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் பல்வேறு வகையான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியாக மாநில அளவிலான கலைப் போட்டிகளும் முடிவுற்றன. இந்தக் கலைத் திருவிழாவில் 29 போட்டிகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை புதுக்கோட்டையைச் சோ்ந்த 61 மாணவ, மாணவிகள் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து மாநில அளவில் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பரிசளிப்பு நிகழ்ச்சியில் 3 ஆம் இடம் பிடித்ததற்கான பரிசை புதுகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணனிடம் வழங்கினாா் மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments