அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.தமிழக முழுவதும் கடந்த 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களிடம் துண்டு பிரசுரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் வழங்கினார்.

மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி ஆட்டோவிற்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, வாகனத்தை எவ்வாறு ஓட்டுவது குறித்த விதிமுறைகளை விளக்கி கூறினார்.அதனை தொடர்ந்து அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே புதுக்கோட்டை காரைக்குடி சாலையில் வாகனங்களை சோதனை செய்து ஓட்டுனர் உரிமம், வண்டியின் உரிம சான்று போன்றவற்றை ஆய்வு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமது அனஸ், உதவி ஆய்வாளர் பொன்னுவேல் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments