புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஹேப்பி பர்த்டே... 49ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது - சிறப்புகள் என்ன?




1974ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் ஒருங்கிணைந்த , தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து தமிழ்நாட்டின் 15ஆவது மாவட்டமாக மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் 48 ஆண்டுகளை கடந்து 49ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்டும் உள்ள இம்மாவட்டம், பல்வேறு இயற்கை வளங்களை கொண்டுள்ளது.

மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4 ஆயிரத்து 661 சதுர கிலோ மீட்டர். இதில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளும்; புதுக்கோட்டை, மணமேல்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், குளத்தூர், கறம்பக்குடி, விராலிமலை, பொன்னமராவதி மற்றும் திருமயம் ஆகிய 12 தாலுகாக்களும் உள்ளன.

மேலும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகள் இருக்கின்றன. புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டமும் இருக்கின்றன. 13 ஊராட்சி ஒன்றியங்கள், 763 கிராமங்கள், 497 ஊராட்சிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற குடைவரைக் கோவில்களும், உலகம் வியக்கும் இசைக் கல்வெட்டுகளையும் கொண்ட குடுமியான்மலை, ஓவியத்திற்கும் குடைவரைக் கோவிலுக்கும் பெயர் பெற்ற சித்தன்ன வாசல், திருமயம் கோட்டை ஆகியவை இதன் வராற்று சிறப்பை உலகறியச் செய்துள்ளன.

ஆவுடையார் கோவில், குடுமியான்மலை, விராலிமலை பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

இஸ்லாமியர்களின் காட்டுபாவா பள்ளிவாசலும், பழமை சிறப்புவாய்ந்த ஆவூர் கிறிஸ்தவ தேவாலயமும், சித்தன்னவாசலில் உள்ள சமணர்களின் படுகையும் இம்மாவட்டத்தின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.


அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் போன்றவை நிறைந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளது இந்த புதுக்கோட்டை மாவட்டம். ஆதி மனிதர்கள் வாழ்ந்த இடமாகவும் திகழ்ந்த. இம்மாவட்டத்தில் உள்ள பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாவட்டத்தில் வெள்ளாறு, பாம்பாறு அக்னியாறு, மற்றும் அம்புலி ஆறு ஆகியவை ஓடுகின்றன. இந்த ஆறுகளைல் மழை காலங்களில் மட்டுமே வெள்ளம் ஓடுகின்றன. பொதுவாக இந்த மாவட்டம் செழிப்பான நீர்வளம் இன்றி வறட்சியான மாவட்டமாகவே இருந்து வருகிறது.

பொருளாதார வளச்சியில் பிற மாவட்டடங்களுடன் ஒப்படுகையில், புதுக்கோட்டை மாவட்டம் அவ்வளவாக வளச்சியடையவில்லை எனறே சொல்லலாம். பொதுவாக இம்மாவட்ட மக்கள் விவசாயத்தை சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த மாவட்டம் 49ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments