தஞ்சாவூர், ரஹ்மான் நகரை சேர்ந்தவர் ராஜா, 35; அசாமில், ராணுவத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த சில நாட்கள் முன், விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த 14ம் தேதி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பாஸ்கரபுரத்தில் உள்ள மசூதிக்குள், அவர் செருப்புடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை தகாத வார்த்தையில் பேசினார்.
இதனால், மசூதியில் இருந்தவர்களுக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மகுதி இமாம் ஜெயினுலாபுதீனை, ராஜா தாக்கி விட்டு தப்பி விட்டார்.
இது குறித்து மருத்துவக் கல்லுாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி போலீசார் ராஜாவை விசாரணைக்கு அழைக்க, வீட்டிற்கு சென்றனர். இதற்கிடையே, ராணுவ வீரர் ராஜா, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இது குறித்து அறிந்த டி.எஸ்.பி,, ராஜா, நேற்று முன்தினம் இரவு, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் சென்று ராணுவ வீரர் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். ராஜா, ராணுவ வீரர் என்பதால், முறைப்படி ராணுவ ரெஜிமெண்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரி போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.