சமரசம் இல்லாமல் வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பேன்: வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் பேச்சு
        புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமரசம் இல்லாமல் வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பேன் என வக்ஃப் வாரிய தலைவர் அப்துல்  ரஹ்மான் பேசினார்.

வக்ஃப் வாரியம் சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவும் திட்ட முன்வடிவம் குறித்த ஆலோசனை கூட்டம் அறந்தாங்கியில் ஜமாத் தலைவர் எஸ்.என்.சேக் முகம்மது தலைமையில்  நடைபெற்றது.

அறந்தாங்கி இஸ்லாமிய மன்றம் தலைவர் டிஏஎன் பீர் சேக் அனைவரையும் வரவேற்றார். ஜமாத் முன்னாள் தலைவர்கள் அப்துல் ஜப்பார், விஎஸ் மைதீன், மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார் அப்துல்லாஹ் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அஸரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சி கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேசும் போது தமிழ்நாட்டில் உள்ள வக்ஃப் சொத்துகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு விமர்சனங்களை புறம் தள்ளி சமரசம் இன்றி பாதுகாப்பேன். வக்ஃப் சொத்துகளை பாதுகாக்க தேவையான சட்ட பாதுகாப்பு உள்ளது. அந்த உரிமை சரியாக முறையாக பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டிய பொருப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சார்பில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிறுவப்படும். இதற்காக இஸ்லாமியர்களை எவ்விதத்திலும் சிரமபடுத்தமாட்டோம். அனைத்து சமூக மக்களுக்காகவும் நிறுவப்படும் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை இஸ்லாமிய மக்கள் பெரிதும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என பேசினார்.
 
இமாம் மீரான் கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காங்கிரஸ் பிரமுகர் பஷிர் அலி, மங்களம் கனி, அப்துல்லாஹ் கனி, பெரியாளுர் ஜியாவுதீன், நகர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு பிச்சை, என்எஸ் தீன், ராஜேந்திரபுரம் அப்துல் சலாம், அரசர்குளம் அப்துல்லாஹ்,   அறந்தாங்கி இஸ்லாமிய மன்ற செயலாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments