காணும் பொங்கல், தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் விளையாட்டு உபகரணங்கள்-கூடுதல் படகுகள் இல்லாததால் ஏமாற்றம்
காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய விளையாட்டு உபகரணங்கள், கூடுதல் படகுகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுற்றுலா தலம்

அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. காணும் பொங்கல் மற்றும் தொ

டர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலத்தில் குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும்-பெண்களும் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர்.


சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலேயே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

பூங்கா

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

படகு குளம்

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

இதுகுறித்து கூற்றுலா பயணிகள் கூறுகையில், சுற்றுலா தலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை பொழுது இங்கேயே கழிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. மேலும் படகுகுளத்தில் போதுமான படகுகள் இல்லை. 6 படகுகள் சேதமடைந்து கிடக்கின்றது. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கின்றோம். சிறுவர்களுக்கு உண்டான பல விளையாட்டு பொருட்களும் உடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளன. அதனை மாற்றி புதிய பொருட்களை பூங்காவில் அமைக்க வேண்டும். பழைய படகுகளை அகற்றி புதிய படகுகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments