கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது
கோட்டைப்பட்டினம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40), மீனவர். இவர் நேற்று தனது பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வலையில் அரிய வகையை சேர்ந்த பச்சை ஆமை ஒன்று சிக்கியது. இதனைக்கண்ட அய்யப்பன் கரைக்கு திரும்பி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரிய வகையை சேர்ந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இவ்வகையான ஆமைகள் மிகவும் அரிதானவை. இந்த வகை ஆமை இப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே மீனவர்கள் வலையில் இது போன்ற அரிய வகையை ேசர்ந்த ஆமைகள் சிக்கினால் அதனை மீட்டு மீண்டும் கடலில் விட வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments