அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணையை வைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்தநிலையில் அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நாள்தோறும் அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பயணிகள் செல்லும் ஊருக்கு எந்த பஸ் எந்த நேரத்தில் உள்ளது என அறந்தாங்கி பஸ் நிலையத்தில் கால அட்டவணை வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டவணை தற்போது சேதம் அடைந்து அட்டவணை இருந்த பிரேம் மட்டுமே காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணையை வைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments