மணமேல்குடியில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
மணமேல்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விரிவாக எடுத்து கூறினார். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்தும், மேலாண்மை கிடங்கில் உள்ள நுண் சத்து உயிர் உரங்கள் குறித்தும் வேளாண்மை அலுவலர் விரிவாக எடுத்து கூறினார். தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையில் உள்ள திட்டங்கள் குறித்து அந்தந்த துறை அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 2023-2024-ம் ஆண்டிற்கான வட்டார செயல் திட்டம் தயாரிப்பதற்கு உறுப்பினர்களிடம் கலந்தாய்வு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தலைப்புகளை வெவ்வேறு இனங்களில் சேர்த்தல் போன்றவை ஆலோசனை செய்யப்பட்டு வட்டார செயல்திட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்டு குழு கூட்ட உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments