நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஜனவரி-26 கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா ஊராட்சி மன்ற தலைவர்..?



கடந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு  6 முறை  கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜனவரி-26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் வியாழக்கிழமை, ஜனவரி 26 ஆம் நாள், நாட்டின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி  கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள் குறித்தான தகவல்களை அ.ஆ. நிலை எண் 150 ஊ.வ.துறை (சி1) நாள். 17.07.1998  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, ச.பி.3) படி அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னரே ஊராட்சி நிர்வாகம் அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

அப்படியிருக்கையில் கிராம சபை கூட்டம் நடைபெற இன்னும் மூன்று (ஜனவரி 26) நாட்களே இருக்கும் தருவாயில் கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் ஊராட்சி மன்ற தலைவர் வெளியிடாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே உடனடியாக கிராம சபை கூட்டம் குறித்தான தகவல்களை கிராம பொதுமக்களுக்கு தெரிவித்து ஒலி பெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006]

இந்த அடிப்படையில் நமது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சுமார் 300 நபர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கவனிக்கவும்...

தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments