காரைக்குடி செட்டிநாட்டில் பழமையான கார்கள் கண்காட்சி
காரைக்குடி அருகே கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை வீடு முன்பு மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் பழமையான கார்கள் கண்காட்சி நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட பழமையான கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சென்னையில் இருந்து, செட்டிநாடுக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் செயலாளரும், ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரின் பேரனும் ஏ.வி.எம் படத்தயாரிப்பாளருமான எம்.எஸ்.குகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பராமரிப்பு

கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித லாபம் நோக்கமின்றி இந்த பழமையான கார்களை பாதுகாத்து வருகிறோம். நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இன்றைய சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பழமையான கார்களை பாதுகாத்து வருகிறோம்.

எங்களிடம் 250-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் உள்ளன. இதில் குறிப்பாக பழமையான மோட்டார் சைக்கிள்கள் ராயல் என்பீல்ட் சூப்பர் மீட்டர், 1944-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட தி பேமஸ் ஜேம்ஸ், 1967-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட எம்.வி.ஆகியுஸ்ட்டா, 1974-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சுசுகி ஆர்.வி.90 ஆகிய மோட்டார் சைக்கிள்களும், 1991-ம் ஆண்டின் மெர்சீட்டஸ் பென்ஸ் 190 டி, வேல்க்ஸ்வேகன் பஸ், 1968-ம் ஆண்டு பியட் 1100 ஆர், 1974-ம் ஆண்டு ஜேக்குவார் எஸ்,ஜே 634, 1963-ம் ஆண்டு சூன்பீம் அல்பின் சீரிஸ் 3, பீட்மாஸ்டர், 1966-ம் ஆண்டு வோல்க்ஸ்வாகன் பீட்டில், 1939-ம் ஆண்டு எம்.ஜி, 1948-ம் ஆண்டு பிலிட் மாஸ்டர், 1971-ம் ஆண்டு பியட், 1964-ம் ஆண்டு பியட் சூப்பர் செலக்ட், 1956-ம் ஆண்டு பிளேமவுத் சேவாய், ஆயுஸ்டின் ஏ30, சேவ்லார்ட் பியூக் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கார்கள் இங்கு கண்காட்சிக்காக நிறுத்தப்பட்டன. இந்த பழமையான கார்களை நன்றாக பராமரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சிக்காக நிறுத்தப்பட்ட கார்கள் முன்பாக நின்று பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments