புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்




மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 24-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், வட்டார அளவிலான 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாம் அனைத்து வட்டாரங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.

அரசு பள்ளிகள்

அதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27-ந் தேதி அன்னவாசலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வருகிற 1-ந் தேதி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3-ந் தேதி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 7-ந் தேதி அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 8-ந் தேதி அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந் தேதி ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 10-ந் தேதி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

14-ந் தேதி கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 15-ந் தேதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, 16-ந் தேதி கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 17-ந் தேதி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 21-ந் தேதி பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

உதவித்தொகை

எனவே புதிதாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோர், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு பராமரிப்பு உதவித்தொகை, வருவாய்த்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை மறுவாழ்வு பயிற்சி, முட நீக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை, வங்கிக்கடன் உதவி, பிற மறுவாழ்வு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 6, ஆகிய சான்றுகளுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments