இந்திய கப்பல்படை பணிகளில் சேர மீனவ வாரிசுகளுக்கு இலவச பயிற்சி 90 நாட்கள் நடக்கிறது
மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மீனவ வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படை மாலுமி பணிகளில் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்வதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கி 90 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சி கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வீதம் பயிற்சி கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

இதற்கு கல்வி தகுதியாக பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும், உரிய உடற்கூறு தகுதி பெற்றுள்ள மீனவ வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments