ஆவுடையார்கோவில் அருகே பனை ஓலையை வெட்டியபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
ஆவுடையார்கோவில் வெள்ள செட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). இவர் அல்லறை காளி கோவில் அருகே உள்ள மரத்தில் பனை ஓலையை வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments