கதிராமங்கலம் கலையரங்கத்தை எம்பி திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சி பொன் சிறுவரை கிராமத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் எதிர்புறம் புதிய கலையரங்கத்தை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.

கதிராமங்கலம் ஊராட்சி பொன் சிறுவரை கிராமத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் எதிர்புறம் புதிய கலையரங்கம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதை தொடர்ந்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தை  திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் திருநாவுக்கரசர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றியில் எங்களது கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று கூறினார். 

ஈரோடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர்அண்ணாமலை நிற்கப் போவதாக கூறுகிறார்களே அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு இந்த அண்ணாமலை என்ன பெரிய அண்ணாமலையே இங்கு வந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறினார், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை எம்பி தொகுதி தனியாக செயல்படுமா என்று கேட்டதற்கு அவர் கூறிய கருத்து மறு சீரமைப்பு என்றைக்கு நடைபெறுகின்றதோ அன்றைக்கு தான் புதுக்கோட்டை தொகுதி தனியாக பிரித்து அமைக்கப்படும் இது சம்பந்தமாக நாம் பாராளுமன்றத்திலும் பேசியுள்ளேன் என்று கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜிகே வாசன் போட்டியிட போவதாக கூறுகிறார்கள் அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு வாசன் என்ன யார் வேண்டுமானாலும் நிக்கட்டும் வெற்றி பெறுவது எங்களது காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறுவது இவிகேஎஸ் இளங்கோவன் தான் என்று கூறினார்.
அவருடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் ஆவுடையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி துரை ஆவுடையார் கோவில் ஒன்றிய தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பொன்துரை ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர் கானூர் வழக்கறிஞர் விஸ்வநாதன் கூடலூர் முத்து கிருபா வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments