சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி பலாத்காரம்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் என்கிற அஜித்குமார் (வயது 21). கூலித்தொழிலாளியான இவர் 9-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி அவரது வீட்டிற்குள் சென்று பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். மேலும் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழும அதிகாரிகள் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பலாத்காரம் செய்த அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2½ லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

இதைத்தொடர்ந்து அஜித்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments