புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.யில் தொழிற்பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) குறுகிய கால பயிற்சி நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அசிஸ்டண்ட் மேனுவல் மெட்டல் ஆர்க் வெல்டிங், சீல்டடு மெட்டல் ஆர்க் வெல்டிங் வெல்டர் என்ற தொழிற்பிரிவில் 3 மாத குறுகிய கால பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்ச வயது 14 முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி பெற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது இல்லை. மேலும் பயிற்சியின் போது நாளொன்று ரூ.100 வீதம் பயிற்சியின் முடிவில் உதவித்தொகை மொத்தமாக வழங்கப்படும். 

பயிற்சி பெற்று முடித்த பிறகு தமிழக அரசால் சான்றிதழும் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் திருக்கோகர்ணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments