சன்மார்க்கச் சேவகர்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர் என்று ஓயிட் ஹவுஸ் ஹாஜியார் அப்துல் பாரி மறைவுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை விடுத்துள்ள இரங்கல்
சன்மார்க்கச் சேவகர்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர் என்று ஓயிட் ஹவுஸ் அப்துல் பாரி மறைவுக்கு ஹாஜியார் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:சென்னை பெரியமேட் ஒயிட்ஹவுஸ் குழுமத்தின் சேர்மன் ஆலிம்களின் நேசர் அல்ஹாஜ் அப்துல்பாரி அவர்கள் 28.01.2023 சனிக்கிழமை இரவு சுமார் 11:45 மணியளவில் ஏக இறைவனின் அழைப்பை ஏற்றார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட நம் அன்புக்குரிய அப்துல் பாரி ஹாஜியார் அவர்கள் மௌலானா மௌலவி அப்துல் ஹை பாகவி அவர்களின் மூத்த மகனாவார்.

சன்மார்க்கச் சேவகர்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர், மார்க்கப்பணிகளுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் குடும்பங்கள் மீது அக்கறை கொண்டவர், அவர்கள் அனைவரும் ஹஜ், உம்ரா செய்திட வேண்டும் என்று விரும்பியவர், புனித பூமியாம் மக்கா மதீனா செல்லவேண்டும் என்ற ஏக்கம் இருந்தும் செல்லும் வாய்ப்பில்லாத சன்மார்க்கச் சேவையாளர்களுக்கு முதல்முறையாக உம்ரா செல்வதற்கான ஏற்பாடுகளை தாமே செய்து கொடுத்தவர்.

நெடுஞ்சாலைகளில் நெடுந்தூரம் பயணம் செய்வோர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதிட ஏதுவாக ஆங்காங்கே பள்ளிவாசல்களை எழுப்பி அவற்றை சமுதாயத்திற்கு சமர்ப்பித்தவர், இடது கைக்குத் தெரியாமல் தன் வலக்கரத்தால் ஈந்துவந்தவர்.

பேரன்பாளன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து நன்மைகளை அங்கீகரித்து மறுமை வாழ்வை உயர்வாக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்வான சுவனபதியை வழங்குவானாக. அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் இதயங்களுக்கு 'சப்ருன் ஜமீல்' எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments