புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை(01-02-23) முதல் தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதத்தில் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி முடிய இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருந்தகங்களின் மூலம் தொடர்புள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. கோழிக்கழிச்சல் வியாதியானது கோழிகள் மற்றும் இதர பறவை இனங்களை தாக்கக்கூடிய வைரஸ் கிருமியினால் ஏற்படக் கூடிய வியாதி ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட கோழிகளுக்கு உடனடியாக இறப்பு ஏற்பட்டு, கோழி வளர்ப்போருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும். இந்நோய்க்கான தடுப்பூசி 8 வார வயதுடைய அனைத்து கோழிகளுக்கும் தங்களது கிராமத்திலேயே கால்நடை பராமரிப்பு துறையினரால் நாளை (புதன்கிழமை) முதல் 14-ந் தேதி முடிய குழுக்கள் அமைத்து போடப்படவுள்ளது. ஆகவே, கோழி வளர்ப்போர் தங்கள் கோழிகளை தடுப்பூசி முகாமிற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டு கோழிக்கழிச்சல் நோயிலிருந்து கோழிகளை பாதுகாத்து பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments