அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்கள் கைது கார், மோட்டார் சைக்கிள்கள், ரூ.4½ லட்சம் பறிமுதல்
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், ரூ.4½ லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் கீழ தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அப்பகுதியில் நேற்று நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

6 வாலிபர்கள் கைது

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பர்வீன்குமார் (வயது 29), ராமு (23), கார்த்திக் (24), விக்னேஷ் (28), சரவணகுமார் (26), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்க பயன்படுத்திய கார், 8 மடிக்கணினிகள், 6 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 390-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments