மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு.. பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!




தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் - மின் இணைப்பு எண்ணை இணைக்க வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 15 வரை பொதுமக்கள் ஆதார் எண் - மின் இணைப்பு எண்ணை இணைக்கலாம் என அரசு குறிப்பிட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

Step 1 : ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண், மொபைல் எண், இமேஜில் இருக்கும் டெக்ஸ்டை டைப் செய்ய வேண்டும்.

Step 2 : நீங்கள் டைப் செய்த மின்இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தெரியும். அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதன்பின் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்


Step 3 : ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள கைப்பேசி எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்தால் போதும். உங்கள் ஆதார் மின்இணைப்புடன் இணைக்கப்பட்டு விடும். மிக எளிதாக ஆதாரை இணைத்து விடலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments