நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு 

 
நாகப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் இப்தி லெப்பை தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (வயது31), அதே பகுதி அலியார் மறைக்காயர் தெருவைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் (24). இருவரும் நண்பர்கள்.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்ற இடத்தில் சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்தஆசிக் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த முகமது இப்ராஹிமை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் விபத்தில் பலியான ஆசிக் ரஹ்மான் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments