திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்க கோரிக்கை



 


தமிழகத்தின் பைபாஸ் லைன் என்றழைக்கப்பட்ட விருதுநகர் - பட்டுக்கோட்டை - விழுப்புரம் பாதைக்கு இடைப்பட்ட பாதையான, திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் நா.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர்,  ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரி யத் தலைவர், தென்னக ரயில்வே  பொது மேலாளர், திருச்சி கோட்ட  ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது: 

திருவாரூர் - பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதை  ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதையாகும். அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக இந்த தடத்தில் 2006 ஆம் ஆண்டு சென்னைக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி அகல  ரயில் பாதை (149கி.மீ) அமைக்கும் பணிகள் 2012 இல் துவக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நிறைவு செய்யப் பட்டன. அதேபோல, திருத்துறைப் பூண்டி அகஸ்தியம்பள்ளி மீட்டர்  கேஜ் பாதையும் (37கி.மீ) அகல  ரயில் பாதையாக மாற்றப்பட்டு 2022  ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் முடிந்து ரயில் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இந்த இரண்டு ரயில் பாதைகளும் வருகிற நிதியாண்டில் மின்மயமாக்கப்பட வேண்டும்.

தென்னக ரயில்வேயில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. மேலும், இரவு நேரங்களில் காட் லைன் மற்றும் திருச்சிராப் பள்ளி - தஞ்சாவூர் - மயிலாடுதுறை பாதைகளில் பயணிகள் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நெரிசல் குறைந்த பகுதி யான விருதுநகர் - காரைக்குடி - திருவாரூர் - மயிலாடுதுறை வழி யாக சரக்கு ரயில்களை இயக்க வேண்டிய நிலைமை உள்ளது.  இந்த நடைமுறை மீட்டர் கேஜ்  காலத்தில் இருந்ததாகவும், அதற்கு பைபாஸ் என பெயரிட்ட தாகவும் தகவல்கள் உள்ளன. எனவே சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த தடத்தை முற்றிலும் மின்மயமாக்கல் செய்ய வேண்டும் என ரயில் பயணிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அதுமட்டுமின்றி, தற்போது பட்டுக்கோட்டை சரக்கு போக்கு வரத்து முனையம் திறக்கப்பட்டுள்  ளதால், சரக்கு போக்குவரத்தில்  முக்கியம் பெறுவது மட்டுமல்லாமல், திருத்துறைப்பூண்டி சரக்கு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் முடியும் தரு வாயில் உள்ளன. இந்த தடத்தில் சரக்கு போக்கு வரத்து மூலம் நெல், அரிசி, தேங் காய், மாங்காய், வாழைத்தார், உப்பு, கருவாடு, உரம், சிமிண்ட், மரம், கிரானைட் கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யும் வாய்ப்பு உள்ளது.

இதனால் ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கும். மேலும், திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி அகல ரயில்  பாதை காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் முக்கியமான சரக்கு போக்கு வரத்து வழித்தடமாக இருக்கிறது. 

சென்னையில் இருந்தும், நாட்டின் வட மாநிலங்களில் இருந்தும் இத்தடத்தின் வழியாக பயணிகள் ரயில்களும் சரக்கு போக்குவரத்து ரயில்களும் வரும் போது, திருவாரூரில் மின்சார ரயில் இன்ஜினுக்கு பதிலாக, டீசல் இன்ஜினை மாற்றி பயணம் நடைபெறுகிறது. இத னால் நேரம், டீசல், மனித வளம் செலவாகிறது. 

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள  ரயில்வே மின்மயமாக்கல் திட்  டத்தில் ரயில்வே வாரியத்தால் இது வரை ஒப்புதல் வழங்கப்படாத ஒரே பாதையாக, திருவாரூர்- காரைக் குடி மற்றும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி உள்ளது. எனவே, வருகிற நிதியாண்டில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை மற்றும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை களை மின்மயமாக்க ஒன்றிய அரசு போதுமான அளவு நிதியை ஒதுக் கீடு செய்து, ரயில்வே துறை இப்பாதையை மின்மயமாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கி றோம். 

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments