கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் 7 ஆம் தேதி முதல் வருகிற 9 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2023 ஜனவரி 05 வியாழக்கிழமை மதியம் 02.00 மணிக்கு திடீரென மழை பெய்தது. கால் மணி நேரம் தீடீர் மழை பெய்தது. பிறகு வெயில் அடிக்க தொடங்கியது இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

2022 வருடம் போதிய மழை இல்லாததால் மக்கள் கலவையில் உள்ளனர்

மழை பெய்தது நெடுங்குளம் காட்டுக்குளம் முழுவதும் நிரம்ப வேண்டும் கோபாலப்பட்டிணம் மக்கள் ஏக்கமாக உள்ளது..










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments