ஊடகங்களை இழிவுபடுத்தும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - மீடியா முன்னேற்ற கழகம் கடும் கண்டனம்.!



ஊடகங்களை இழிவுபடுத்தும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - மீடியா முன்னேற்ற கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மீடியா முன்னேற்ற கழகம் பத்திரிக்கை அறிக்கை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை இழிவு செய்து மிரட்டும் தொனியில் பேசி ஜனநாயகத்தின் நான்காவது தூணை சிதைத்து வருகிறார் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பத்திரிக்கை சங்கங்கள் என பல்வேறு தரப்பும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.அந்த வகையில் மீடியா முன்னேற்ற கழகம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அதிரை ஹசன் தமது முகநூல் பக்கத்தில் தமது கண்டனத்தை பதிந்து இருக்கிறார் அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, 
மத்திய பாஜக அரசு டிஜிட்டல் இந்தியா என பிதற்றுவது எல்லாம் வாய் சவடால் என்றும் ,தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை அநாகரிக அரசியல் செய்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்  பக்குவமில்லாத பேச்சுக்களால் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வருகிறார் எனவும் .  இச்செயல்  வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டு இருக்கிறார்.
டிஜிட்டல்  இந்தியாவை உருவாக்கி விட்டோம் என மோடி முழங்குகிறார் ஆனால் அக்கட்சியினர் டிஜிட்டல் ஊடகங்களை புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது  அண்ணாமலை நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்துள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீப நாட்களாகவே மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார் என் அதில் தெரிவித்திருக்கிறார்.
ராஃபேல் வாட்சிக்கான  பில்ளை கேட்டால் சட்டென்று அண்ணாமலை டென்ஷனாகி விடுவதாகவும்  இதனால்  அவருக்கு முழு ஒய்வு தேவைப்படுகிறது, பாஜக முன்னாள் மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் பிரச்சனைக்கு பின்னர் பதற்றத்துடனே இருக்கும் அண்ணாமலைக்கு உடனடியாக ஓய்வு  வழங்கிட தேசிய பாஜகவை கேட்டு கொள்வதாக தமது முகநூல் பக்கத்தில் ஹசன் தெரிவித்திருக்கிறார். 

மேலும் பாஜக அண்ணாமலை குறித்து தேசிய பத்திக்கையாளர்கள் நல ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்க உள்ளதாக கூறுகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments