கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில் கன மழை!கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில் மழை பெய்தது.

தமிழகத்தில் மாண்டஸ் புயலுக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் கடந்த மாதம் (ஜனவரி) முழுவதும் மழை இல்லாமல் பனிபொழிவு இருந்து வந்தது.

இந்த நிலையில் வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் நேற்று மேகமூட்டமாக லேசான மழை பெய்தது இன்று பிப்ரவரி 02ம் தேதி காலை முதல் பரவலாக மழை பெய்தது இதனால் சாலைகளில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது மழை பெய்ததால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளங்கள் நிறையும் என ஏக்கத்துடன் உள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments